கனடாவில் விமான விபத்தில் 7 பேர் பலி

கனடாவில் விமான விபத்தில் 7 பேர் பலி

கனடாவில் விமான விபத்தில் 7 பேர் பலியாயினர்.
Published on

ஒட்டாவா,

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தின் தலைநகர் டொராண்டோவில் இருந்து கிங்ஸ்டோன் நகருக்கு சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. விமானத்தில் 3 சிறுவர்கள் உள்பட 7 பேர் இருந்தனர். புறப்பட்ட சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை விமானம் இழந்தது. இதையடுத்து, மாயமான விமானத்தை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

இந்த நிலையில் கிங்ஸ்டோன் நகரையொட்டி உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் விமானம் விழுந்து கிடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது தெரியவந்தது.

இந்த கோரவிபத்தில் விமானத்தில் பயணம் செய்த 3 சிறுவர்கள் உள்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்துக்கான காரணம் என்ன என்பது உடனடியாக தெரியவில்லை. இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com