ஆப்கானிஸ்தானின் வடக்கே சோதனை சாவடிகள் மீது தாக்குதல்; 7 தீவிரவாதிகள் சுட்டு கொலை

ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பு சோதனை சாவடிகளை தாக்கிய தீவிரவாதிகள் மீது நடந்த பதில் தாக்குதலில் 7 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானின் வடக்கே சோதனை சாவடிகள் மீது தாக்குதல்; 7 தீவிரவாதிகள் சுட்டு கொலை
Published on

மைமனா,

ஆப்கானிஸ்தானின் வடக்கே பர்யாப் மாகாணத்தில் கர்ஜிவான் மாவட்டத்தில் அமைந்த சில பாதுகாப்பு சோதனை சாவடிகள் மீது இன்று தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.

இதனை அடுத்து பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பியோடினர். இதன்பின் சம்பவ பகுதியில் 7 தீவிரவாதிகளின் உடல்கள் கிடந்துள்ளன. காயமடைந்த 4 தீவிரவாதிகள் மீட்கப்பட்டனர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரிகள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என கூறப்படுகிறது. இதுபற்றி தலீபான் அமைப்பினர் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com