பிரிட்டிஷ் கொலம்பியாவில் ராட்சத கட்டுமான கிரேன் சரிந்து விபத்து: பலர் உயிரிழந்ததாக அச்சம்

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் ராட்சத கட்டுமான கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் சிக்கி பலர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ராட்சத கட்டுமான கிரேன் சரிந்து விபத்து: பலர் உயிரிழந்ததாக அச்சம்
Published on

ஒட்டவா,

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கெலவ்னா நகரில் 25 மாடி கட்டிடத்தின் கட்டுமான பணிகளுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ராட்சத கிரேன் சரிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இந்த கோர விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்கிற உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

அந்தக் காட்சியின் வீடியோக்களும் புகைப்படங்களும் குடியிருப்பு கோபுரத்தைக் கட்டியெழுப்பப் பயன்படுத்தப்பட்ட கிரேனின் நிமிர்ந்த பகுதி இன்னும் தொங்கி கொண்டிருப்பதைக் காட்டியது.

இந்த சம்பவத்தில் அருகிலுள்ள பல கட்டிடங்களும் சேதமடைந்துள்ளன. இதனைத்தொடர்ந்து அந்த இடத்திற்கு அருகிலுள்ள கட்டிடங்களை உடனடியாக காலி செய்ய அதிகாரிகள் உத்தரவிட்டு, அந்த பகுதியை அவசரகால நிலைக்கு உட்படுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com