ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தின் மீது விமானம் மோதி விபத்து: 5 பேர் பலி

ஆஸ்திரேலியாவில் வணிக வளாகம் மீது சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளனதில் 5 பேர் பலியாகினர்.
ஆஸ்திரேலியாவில் வணிக வளாகத்தின் மீது விமானம் மோதி விபத்து: 5 பேர் பலி
Published on

மெல்போர்ன்,

ஆஸ்திரேலியாவின் பெரும் நகரங்களில் ஒன்றான மெல்போர்னில் இலகு ரக விமானம் ஒன்று அங்குள்ள வணிக வளாகம் மீது மோதி விபத்துக்குள்ளானதில் விமானத்தில் பயணித்த 5 பேர் பலியாகினர்.

டாஸ்மானியா மற்றும் ஆஸ்திரேலியா இடையே உள்ள கிங் தீவுகளை சுற்றிப் பார்ப்பதற்காக, 5 சுற்றுலாப்பயணிகளை விமானம் ஏற்றிச்சென்றதாக கூறப்படுகிறது. விமானம் வணிக வளாகத்தில் மோதியதில், பெரும் தீ விபத்து ஏற்பட்டது. புகை மூட்டமும் சூழ்ந்ததால் மக்கள் பீதி அடைந்தனர். வணிக வளாகம் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதன் காரணமாக பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com