பாரம்பரிய-கலாசார பகுதிகளை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை; அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சி அறிவிப்பு

அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சியின் சார்பில் அல் வத்பா பாலைவனப் பகுதியில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது.
பாரம்பரிய-கலாசார பகுதிகளை சீர்குலைப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை; அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சி அறிவிப்பு
Published on

இந்த பணியில் அபுதாபி பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.அப்போது அந்த பகுதியில் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த பாறைகளின் அருகில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் அங்குள்ள ஒரு பாறையின் மீது ஒரு சிலர் தங்களது பெயரையும், தங்களது பெயரை குறிக்கும் வகையில் ஆங்கில எழுத்துக்களையும் குறித்துள்ளனர்.

மேலும் அந்த பகுதியின் அருகில் பிளாஸ்டிக்கால் ஆன குப்பைகள், பாட்டில்கள் உள்ளிட்டவற்றையும் வீசி சென்றுள்ளனர். இது மிகவும் அநாகரிமான செயல் ஆகும். மேலும் பாரம்பரியத்தை சீர்குலைக்கும் செயல் எனவும் இந்த தூய்மைப் பணியில் ஈடுபட்ட பொதுமக்கள் பலர் வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து அபுதாபி சுற்றுச்சூழல் ஏஜென்சி கூறியதாவது:-

பாலைவனம் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட பகுதிக்கு வருபவர்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், பாரம்பரிய மற்றும் கலாசார இடங்களை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் பாலைவனப் பகுதிக்கோ, கடல் பகுதிக்கோ செல்லும் போது பிளாஸ்டிக் உள்ளிட்ட குப்பைகளை கண்ட இடத்தில் போடுவதை தவிர்க்க வேண்டும். விதிமீறலில் ஈடுபடுபவர்கள் குறித்து பொதுமக்கள் ஏஜென்சிக்கு தெரிவிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com