

கிரீட்,
கிரீஸ் நாட்டின் கிரீட் தீவில் இன்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.8 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்திற்கு ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
இதனால், மக்களில் பலர் வீடுகள், பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் இருந்து தப்பியோடினர். பழைய கட்டிடங்கள் பல இடிந்து விழுந்துள்ளன. இதுதவிர, 9 பேர் காயமடைந்து உள்ளனர்.