சாலமன் தீவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

சாலமன் தீவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது.
சாலமன் தீவில் கடுமையான நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு
Published on

ஹோனியாரா,

சாலமன் தீவில் லதா நகரில் இருந்து தென்மேற்கே 133 கி.மீ. தொலைவில் இன்று காலை கடுமையான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவானது.

இதனை அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதேபோன்று ஜப்பானின் ஐசூ தீவில் நேற்றிரவு ரிக்டரில் 5.2 அளவிலான கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் அந்த மையம் தெரிவித்தது.

ஜப்பானில் டோக்கியோ நகருக்கு தென்கிழக்கே 600 மைல்கள் தொலைவில் சிசிஜிமா தீவில் நேற்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.2 ஆக பதிவானது என அந்நாட்டு வானிலை ஆய்வு அமைப்பு தெரிவித்தது. எனினும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com