கிரீசில் 16 பெண்கள் மீது பாலியல் தாக்குதல்; பாகிஸ்தானியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

கிரீஸ் நாட்டில் 16 பெண்கள் மீது பாலியல் மற்றும் வன்முறை தாக்குதல் நடத்திய பாகிஸ்தானியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
கிரீசில் 16 பெண்கள் மீது பாலியல் தாக்குதல்; பாகிஸ்தானியருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
Published on

ஏதென்ஸ்,

கிரீஸ் நாட்டில் 16க்கும் மேற்பட்ட பெண்கள் மீது பாலியல் மற்றும் வன்முறை தாக்குதல் நடத்திய வழக்கில் 32 வயதுடைய பாகிஸ்தானியர் ஒருவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

இதில், தொடர்புடைய பாதிக்கப்பட்ட தெஸ்பினா பிளேடனக்கி என்ற இளம்பெண் சம்பவம் நடந்து ஓராண்டு ஆனபின்பும், தனக்கு ஏற்பட்ட காயத்தில், அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

அவரை அடித்து, துன்புறுத்தியதுடன், பாலியல் வன்கொடுமையும் செய்ய முயன்றுள்ளார். இதுபற்றிய புகார் அளித்த பின்பு, 16 பெண்கள் பாகிஸ்தானிய நபர் மீது புகார் அளித்துள்ளனர்.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றத்திற்காக வழக்கு விசாரணையின் முடிவில் பாகிஸ்தானியருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com