காதலனுடன் காரில் பாலியல் உறவால் நோய் தொற்று; ரூ.40 கோடி காப்பீடு தொகை பெறும் காதலி

அமெரிக்காவில் நோய் பாதித்த முன்னாள் காதலனுடன் காரில் பாலியல் உறவு வைத்ததில் நோய் தொற்று ஏற்பட்டதற்காக பெண் ஒருவர் கோரிய ரூ.40 கோடி காப்பீடு தொகை அவருக்கு கிடைக்க உள்ளது.
காதலனுடன் காரில் பாலியல் உறவால் நோய் தொற்று; ரூ.40 கோடி காப்பீடு தொகை பெறும் காதலி
Published on

மிசோரி,

அமெரிக்காவின் மிசோரி நகரில் பாலியல் நோய் பாதித்த தனது முன்னாள் காதலனின் காரில் அவரது காதலி பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளார். அந்த காரானது கெய்கோ என்ற நிறுவனத்தில் காப்பீடு செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பாலியல் நோய் காதலனிடம் இருந்து காதலிக்கும் தொற்று கொண்டது. அவருக்கு ஹியூமன் பேப்பில்லோமாவைரஸ் எனப்படும் எச்.பி.வி. தொற்று ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரியில், தனக்கு ஏற்பட்ட பாதிப்புக்காக கெய்கோ நிறுவனத்திடம் இருந்து காதலி இழப்பீடு கோர இருக்கிறார் என்பதற்கான எம்.ஓ. ஒன்று அனுப்பப்பட்டது.

அந்த பெண் தெரிவித்துள்ள குற்றச்சாட்டில், காதலரால் தனக்கு பாலியல் நோய் தொற்று ஏற்பட்டு உள்ளது. அவருக்கு முன்பே நிலைமை பற்றி தெரியும். பாதுகாப்பற்ற உடலுறவில் உள்ள ஆபத்தும் தெரியும். எனினும், காதலருக்கு உள்ள நோய் தொற்று பற்றி அவர் தனது முன்னாள் காதலியான அந்த பெண்ணிடம் தெரிவிக்காமல் மறைத்து விட்டார்.

இதனால், இன்சூரன்ஸ் செய்யப்பட்ட காரில் வைத்து நடந்த பாலியல் உறவில் ஏற்பட்ட தொற்றுக்கு இழப்பீடாக ரூ.40 கோடி கெய்கோ நிறுவனம் வழங்கும்படி கோரியுள்ளார்.

இந்த வழக்கில் கீழ் கோர்ட்டு அந்த பெண்ணுக்கு ஏற்ற தீர்ப்பை வழங்கியுள்ளது. இதனை தொடர்ந்து கெய்கோ நிறுவனம், மேல்முறையீடு செய்தது. எங்களது நிறுவன கொள்கைக்குள் இந்த கோரிக்கை வராது என கெய்கோ வாதம் செய்தது.

ஆனால், கீழ் கோர்ட்டு வழங்கிய தீர்ப்பு மிசோரி கோர்ட்டிலும் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால், அந்த பெண்ணுக்கு ரூ.40 கோடி இழப்பீடு கிடைக்க உள்ளது. எனினும், கெய்கோ நிறுவனம் பெடரல் கோர்ட்டில் முறையீடு செய்ய முடிவு செய்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com