ஷாருக்கான் பிறந்தநாள் துபாயில் கொண்டாட்டம் !

புர்ஜ் காலிபாவில் ஷாருக்கான் குறித்து ‘நாங்கள் உங்களை நேசிக்கிறோம்’ எனும் வாசகம் ஒளிபரப்பப்பட்டது.
ஷாருக்கான் பிறந்தநாள் துபாயில் கொண்டாட்டம் !
Published on

துபாய்,

நடிகர் ஷாருக்கானின் 56-வது பிறந்தநாள் துபாயில் உள்ள புர்ஜ் காலிபாவில் நேற்று கொண்டாடப்பட்டது.

புர்ஜ் காலிபாவில் உள்ள பெரிய திரையில் ஷாருக்கானை குறித்து நாங்கள் உங்களை நேசிக்கிறோம் எனும் வசனம் ஒளிபரப்பப்பட்டது.

பிரபல தொழிலதிபர் முகமது அலபர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

அங்கு துஜே தேக்கா தோ ஏஹ் ஜானா சனம் ... ...... ......... பாடலும் ஒளிபரப்பப்பட்டது.

புர்ஜ் காலிபாவில் ஷாருக்கான் குறித்து ஒளிபரப்பப்படுவது இது 3-வது முறை ஆகும்.

நடிகர் ஷாருக்கான் கடந்த ஆண்டு தனது பிறந்தநாளை துபாயில் கொண்டாடினார். இந்நிலையில், இந்த ஆண்டு அவர் மராட்டிய மாநிலம் அலிபாக்கில் உள்ள தனது பண்ணை வீட்டில் நெருங்கிய வட்டாரத்துடன் கொண்டாடியுள்ளார்.

ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான், கடந்த சனிக்கிழமை அன்று சிறையில் இருந்து வெளியே வந்த நிலையில், அவர் தனது மகன் மற்றும் குடும்பத்தாருடன் இணைந்து தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

தொழிலதிபர் முகமது அலபர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com