ஜப்பானின் மேற்கே தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கங்கள்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு

ஜப்பானின் மேற்கே கடலோர பகுதியில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. #Earthquake
ஜப்பானின் மேற்கே தொடர்ச்சியாக ஏற்பட்ட நிலநடுக்கங்கள்; ரிக்டரில் 5.8 ஆக பதிவு
Published on

டோக்கியோ,

ஜப்பானின் மேற்கே ஷிமேன் என்ற இடத்தில் கடலோர பகுதியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் தொடர்ச்சியாக நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன.

இந்நிலநடுக்கம் 5.8 ஆக ரிக்டரில் பதிவாகி உள்ளது என ஜப்பான் வானிலை ஆய்வு கழகம் தெரிவித்துள்ளது. இதனால் ஏற்பட்ட கடுமையான அதிர்வுகளால் தரை பகுதியில் உள்ள சுவர்கள் இடிந்து விழலாம். விரிசல்களையும் ஏற்பட செய்யலாம். நில சரிவுகளை கூட ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.

இதனால் யாருக்கும் காயம் ஏற்பட்ட தகவல்கள் எதுவும் இல்லை. எனினும், வருகிற நாட்களில் இந்த பகுதியில் கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தும் நிலநடுக்கம் ஏற்படலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com