அதிகரிக்கும் கொரோனா பரவலுக்கு மத்தியில் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்திய ஷாங்காய்

சீனாவின் பொருளாதார மையமமாக திகழும் ஷாங்காயில் கொரோனா கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டு உள்ளது.
image credit:ndtv.com
image credit:ndtv.com
Published on

பீஜிங்,

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளது. ஆனால், சீனாவில் இதற்கு நேர்எதிராக ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து கானப்படுகிறது.

சீனாவின் பொருளாதார மையம் ஆக திகழ கூடிய, வணிக மற்றும் நிதி தலைநகராக விளங்கும் ஷாங்காய் மாநகரில், கடந்த 3 வாரங்களாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகனத் தொழில் கடும் இழப்பை சந்தித்துள்ளது. இது சர்வதேச நிறுவங்களுக்கு பெரும் அடியை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், ஷாங்காயில் அதிகரித்துவரும் கொரோனா இறப்புகளுக்கு மத்தியில் கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டு உள்ளது. அதிகாரிகள் கூறும்போது நேற்று மட்டும் ஷாங்காயில் 18 ஆயிரத்திற்கும் அதிகமானோர் அறிகுறிகளற்ற கொரோனா பாதிப்பை சந்தித்துள்ளனர். பாதிப்பால், 19 பேர் இறந்துள்ளனர். இந்த சூழலில் அதிகாரிகள் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்தியுள்ளனர்.

சுமார் 40 லட்சம் மக்கள் கடுமையான கொரோனா கட்டுப்படுகளிலிருந்து விடுவிக்கப்பட்டதாக அதிகாரிகள் அறிவித்தனர். சில தொழிற்சாலைகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த இரு வாரங்களில் கொரோனா பரவல் இல்லாத பகுதிகளில் மக்கள் சுதந்திரமாக நடமாட முடியும்.

இருப்பினும், இந்த தளர்வுகள் சீரற்றதாக உள்ளது என்றும், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பகுதிகளில் பலர் தங்கள் வீட்டு வளாகங்களை விட்டு வெளியேற அனுமதி மறுக்கப்படுவதாக இணையதளங்களில் மக்கள் புகார் அளித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com