மனைவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நவாஸ் ஷெரீப்புக்கு பரோல்

மனைவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு பரோல் வழங்கப்பட்டுள்ளது.
மனைவியின் இறுதிச்சடங்கில் பங்கேற்க நவாஸ் ஷெரீப்புக்கு பரோல்
Published on

இஸ்லமாபாத்,

பனாமா கேட் ஊழலில் சிக்கி சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் மனைவி பேகம் குல்சூம் லண்டனில் உள்ள மருத்துவமனையில் புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். 2014-ம் ஆண்டிலிருந்து சிகிச்சை பெற்றுவரும் அவருடைய உடல்நிலை கடந்த சிலநாட்களாக மோசமடைந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.

இந்நிலையில், தனது மனைவியின் இறுதி சடங்கில் பங்கேற்க பரோல் கேட்டு விண்ணப்பித்திருந்தார் நவாஸ் ஷரிப்.அவரது பரோல் மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அவருக்கு 12 மணி நேர பரோல் கொடுத்து உத்தரவிட்டது. இதையடுத்து, ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவாஸ் ஷரிப் மற்றும் மரியம் நவாஸ், அவரது கணவர் ஆகியோர் லாகூரை வந்தடைந்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com