உடல் நலக்குறைவால் லண்டனில் சிகிச்சை பெறும் மனைவியைக்காண இங்கிலாந்து சென்றார் நவாஸ் ஷெரீப்

உடல் நலக்குறைவால் லண்டனில் சிகிச்சை பெறும் மனைவியைக்கான பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இங்கிலாந்து புறப்பட்டு சென்றார்.
உடல் நலக்குறைவால் லண்டனில் சிகிச்சை பெறும் மனைவியைக்காண இங்கிலாந்து சென்றார் நவாஸ் ஷெரீப்
Published on

இஸ்லமாபாத்,

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், லண்டனில் சிகிச்சை பெறும் தனது மனைவியை உடன் இருந்து கவனித்துக்கொள்ள இங்கிலாந்து புறப்பட்டு சென்றார். நவாஸ் ஷெரீப்புடன் அவரது மகள் மர்யம் ஷெரிப்புடன் உடன் சென்றார். பனமா பேப்பர்ஸ் மோசடி வழக்கு விசாரணையில் ஆஜராக நீதிமன்றம் நவாஸ் ஷெரீப்புக்கு ஒரு வாரம் விலக்கு அளித்துள்ள நிலையில், அவர் லண்டன் புறப்பட்டுச்சென்றுள்ளார்.

பனமாபேப்பர்ஸ் மோசடி தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதையடுத்து, நவாஸ் ஷெரீப் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மூன்று வழக்குகளையும் தேசிய பொறுப்புடமை கோர்ட் விசாரித்து வருகிறது. தேசிய பொறுப்புடமை கோர்ட் நேற்று நவாஸ் ஷெரீப்புக்கு டிசம்பர் 5 முதல் 12 ஆம் தேதி வரை நேரில் ஆஜராவதில்இருந்து விலக்கு அளித்தது. மர்யம் நவாஸுக்கு நவம்பர் 15 ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 15 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், நவாஸ் ஷெரீப் புற்று நோயால் அவதிப்படும் தனது மனைவி கல்சூமை காண லண்டன் புறப்பட்டு சென்றுள்ளார்.

நவாஸ் ஷெரீப்பின் மனைவி கல்சூம் நவாஸ் ஷெரீப் (வயது 67) தொண்டைப்புற்று நோய் காரணமாக இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். புற்றுநோயின் ஆரம்ப நிலையான லிம்போமாவால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு தற்போது வரை மூன்று அறுவை சிகிச்சைகள் நடைபெற்றுள்ளன. கல்சூம் நவாஸுக்கு புற்று நோய் ஆரம்ப நிலையில் உள்ளதால், குணப்படுத்தமுடியும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com