வங்கதேச வன்முறை வழக்கில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு


வங்கதேச வன்முறை வழக்கில் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிப்பு
x
தினத்தந்தி 17 Nov 2025 2:38 PM IST (Updated: 17 Nov 2025 2:39 PM IST)
t-max-icont-min-icon

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

டாக்கா,

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில், ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த வன்முறையை தொடர்ந்து பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், அவர் வங்கதேசத்தை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சம் புகுந்தார். அரசுக்கு எதிராக போராடுவோரை சுட்டுக்கொல்ல ஹசீனா உத்தரவிட்ட ஆடியோ வெளியானது.

இதை ஆதாரமாக வைத்து ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை மந்திரி, முன்னாள் போலீஸ் ஐ.ஜி, ஆகியோர் மீது, மனித குலத்திற்கு எதிராக குற்றம் புரிந்ததாக புதிய வழக்கை தீர்ப்பாயம் பதிந்து விசாரணை நடத்தி வந்ததுஇந்த நிலையில், மேற்கூறிய வழக்கில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில், மனித குலத்திற்கு எதிராக ஷேக் ஹசீனா குற்றம் செய்துள்ளார் என அந்நாட்டின் சர்வதேச குற்ற தீர்ப்பாயம் அறிவித்தது. மேலும் அவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. ஷேக் ஹசீனா கடந்த ஓராண்டுக்கும் மேலாக இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story