வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனாவின் வாக்காளர் அடையாள அட்டை முடக்கம்

வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடக்கிறது.
டாக்கா,
வங்காளதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா. இவரது அரசாங்கத்துக்கு எதிராக மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் குதித்ததால் பதவி விலகிய ஷேக் ஹசீனா அங்கிருந்து தப்பி இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். வங்காளதேசத்தில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் பொதுத்தேர்தல் நடக்கிறது.
இந்தநிலையில் ஷேக் ஹசீனாவின் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் முடக்கியது. அந்த நாட்டு சட்டத்தின்படி வாக்காளர் அடையாள அட்டை முடக்கப்பட்டால் வெளிநாட்டில் இருப்பவரால் வாக்களிக்க முடியாது. எனவே தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கையால் ஷேக் ஹசீனா வாக்களிப்பது தடை செய்யப்பட்டு உள்ளது.
அதேபோல் அவரது தங்கை ஷேக் ரெஹானா, மகன் சஜீப் வாஸெட் ஜாய் மற்றும் மகள் சைமா வாஸெட் புட்டுல், ஷேக் ஹசீனாவின் முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் ஜெனரல் தாரிக் அகமது சித்திக் ஆகியோரின் வாக்காளர் அடையாள அட்டைகளையும் தேர்தல் ஆணையம் முடக்கி உள்ளது.






