கொசோவோ நாட்டு பிரதமர் மீது முட்டை வீச்சு; நாடாளுமன்றத்தில் பரபரப்பு

கூட்டத்தொடரின் போது இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ள அல்பின் குர்தி மீது எதிர்க்கட்சி எம்.பி. முட்டை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொசோவோ நாட்டு பிரதமர் மீது முட்டை வீச்சு
Published on

கொசேவோ நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இடைக்கால பிரதமராக பதவியேற்றுள்ள அல்பின் குர்தி மீது எதிர்க்கட்சி எம்பி முட்டை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற கூட்டத்தொடர்

கொசேவோ நாட்டின் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜூன் மாத தேர்தலுக்கு பிறகு கூடியது. அதனை தொடர்ந்து நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தபோது நாட்டின் ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க கூடுதல் அவகாசம் தேவை என்றும், இதுகுறித்து நடவடிக்கையில் எதிர்கட்சிகளுடன் அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் தற்காலிக பிரதமர் வேண்டுகோள் விடுத்ததை அடுத்து சலசலப்பு ஏற்பட்டது,

முட்டை வீச்சு

இதனை தொடர்ந்து அலையன்ஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டைம் காத்ரிஜாஜ் தன்னுடைய பள்ளியில் வைத்திருந்த பழுப்பு நிற முட்டைகளை துக்கி அவர் மீது வீசத் தொடங்கினார்.

முட்டைகள் வீசியதோடு, தற்காலிக பிரதமரை நோக்கி “அவமானம், அவமானம்” என எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு பெண் கூறினார்.

உடனடியாக இதில் தலையீட்டு சக எம்பி-களும், நாடாளுமன்ற பாதுகாப்பு பணியாளர்களும் அந்த பெண்ணை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.இந்த எதிர்பாராத சம்பவம் காரணமாக நாடாளுமன்ற நடவடிக்கை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

சபாநாயகர் பதவிக்கான வேட்பாளரை முன்மொழிவதற்கு முன்னதாக, எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த கூடுதல் அவகாசம் தேவை என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினரின் செயலால் நாடாளுமன்றம் பரபரப்பானது.

X

Daily Thanthi
www.dailythanthi.com