14 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு 'பேஸ்புக்' நிறுவனத்தின் நிர்வாகி திடீர் விலகல்

14 ஆண்டுகள் பணியாற்றிவிட்டு ‘பேஸ்புக்’ நிறுவனத்தின் நிர்வாகி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.
Image Courtacy: AFP
Image Courtacy: AFP
Published on

சான்பிரான்சிஸ்கோ,

'பேஸ்புக்' சமூக ஊடகத்தின் தாய் நிறுவனம் மெட்டாவின் தலைமை செயல் அதிகாரி பதவி வகித்தவர், ஷெரில் சாண்ட்பெர்க்.

ஒரு புத்தொழில் நிறுவனமாக (ஸ்டார்ட் அப்) அந்த நிறுவனத்தைத் தொடங்கி , அதை டிஜிட்டல் விளம்பர சாம்ராஜ்யமாக மாற்றுவதில் பக்க பலமாக இருந்தவர் ஷெரில் சாண்ட்பெர்க். முதலில் இவர் கூகுளில் சேர்ந்து 4 ஆண்டுகாலம் பணியாற்றியதும் உண்டு.தற்போது அவர் மெட்டாவில் இருந்து விலகுவது குறித்து தனது 'பேஸ்புக்' பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார்.

அந்தப் பதிவில் அவர், "நான் 2008-ம் ஆண்டு இந்தப் பணியில் சேர்ந்தபோது, இதில் ஒரு 5 ஆண்டு காலம் பங்களிப்பு செய்வேன் என்றுதான் நம்பினேன். 14 ஆண்டுகளுக்கு பிறகு எனது வாழ்வின் புதிய அத்தியாயத்தை எழுதுவதற்கான தருணம் வந்திருக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.

விளம்பர வருமானத்தில் 'டிக்டாக்' போட்டி நிறுவனமாக வந்து கொண்டிருக்கிற தருணத்தில், 'பேஸ்புக்' வருவாய் குறையும் சூழலில் இவரது விலகல் ஒரு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்தப் பெண் பிரபலத்தின் இடத்துக்கு மெட்டாவின் தலைமை வளர்ச்சி அதிகாரியாக உள்ள ஜாவியர் ஆலிவன் வருகிறார்.ஷெரில் சாண்ட்பெர்க் கணவர் கடந்த 2015-ம் ஆண்டு திடீரென இறந்து விட்டார். இந்த கோடை கோலத்தில் இவர் மறுமணம் செய்து கொண்டார். இவரது பதவி விலகல் அறிவிப்பைத் தொடர்ந்து மெட்டாவின் பங்குகள் 4 சதவீத அளவுக்கு சரிவை சந்தித்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com