

அமெரிக்கா - ஈரான் போரால் மத்திய கிழக்கில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வழியாக செல்லும் கப்பல்கள் மீது சமீப நாட்களாக தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஓமன் நாட்டின் கடற்கரைக்கு அருகே 14 இந்தியர்களுடன் சென்ற ஒரு சிறிய ரகப் படகு இன்று காலை திடீரென மூழ்கத் தொடங்கியது. நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த இந்தியர்களைக் காப்பாற்ற அமெரிக்கக் கடற்படை, இந்திய கடற்படை இணைந்து ஒரு மிகப்பெரிய மீட்புப் பணியை மேற்கொண்டன .
அமெரிக்காவின் பி-8 கடல் ரோந்து விமானமும் மீட்புப்பணியில் ஈடுபட்டது. மேலும்,அமெரிக்கப் படகுகளும் உதவிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்திய மாலுமிகள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. படகு மூழ்கியதற்கான காரணம் குறித்த இதுவரை அறிவிக்கப்படவில்லை. இந்த விபத்தைஉறுதி செய்துள்ள ஓமனுக்கான இந்தியத் தூதரகம், இந்தியக் கொடியுடன் 14 இந்திய மாலுமிகளுடன் பயணித்த விராட் 1 என்ற கப்பல், விபத்தில் சிக்கி உள்ளதாக தெரியவந்துள்ளது.
ஓமன் அதிகாரிகள் மற்றும் கப்பல் உதவியுடன் தேடுதல் மற்றும் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளோம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தெரியவில்லை