செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல்

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது.
செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீண்டும் தாக்குதல்
Published on

சனா,

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் நேற்று செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.

இந்நிலையில், செங்கடலில் பயணித்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் சரக்கு கப்பலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட 2 மாலுமிகள் காயமடைந்தனர். மேலும், 2 மாலுமிகள் கடலில் விழுந்ததாகவும், அவர்களை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com