சிரியாவில் அதிர்ச்சி சம்பவம்: தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 20 பேர் பலி


சிரியாவில் அதிர்ச்சி சம்பவம்: தேவாலயத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் சிக்கி 20 பேர் பலி
x

தேவாலயத்தில் மக்களோடு மக்களாக இருந்த ஆசாமி ஒருவர் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்தினார்.

டமாஸ்கஸ்,

மேற்கு ஆசிய நாடான சிரியாவின் தலைநகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியான டுவைலாவில் மார் எலியாஸ் என்ற தேவாலயம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று இந்த தேவாலயத்தில் ஏராளமானவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர்.

அப்போது, தேவாலயத்தில் பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. அதாவது தேவாலயத்தில் மக்களோடு மக்களாக இருந்த ஆசாமி ஒருவர் தற்கொலை குண்டுவெடிப்பை நிகழ்த்தினார். இந்த தாக்குதலில் தேவாலயத்தில் இருந்த 13 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 53 பேர் படுகாயம் அடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் குண்டுவெடிப்பில் தற்போது பலி எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி 20 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இந்த விபத்தில் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தேவாலயத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story