கிறிஸ்தவ ஆலயத்தில் துப்பாக்கி சூடு; 6 பேர் சாவு

மேற்கு ஆப்பிரிக்க நாடான பர்கினா பாசோ நாட்டில் சோம் மாகாண தலைநகர் ஜிபோவுக்கு அருகே சில்காடியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நேற்று முன்தினம் வழிபாடு நடந்து கொண்டிருந்தது.
கிறிஸ்தவ ஆலயத்தில் துப்பாக்கி சூடு; 6 பேர் சாவு
Published on

வாகடூகு,

7 மோட்டார் சைக்கிள்களில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், ஆலயத்துக்குள் புகுந்து பாதிரியார், அவரது 2 மகன்கள் மற்றும் 3 பேரை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுக்கொன்றனர்.

இதற்கான காரணம் மற்றும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை. அங்கு அல்கொய்தா மற்றும் ஐ.எஸ். ஆதரவு பெற்ற பல்வேறு பயங்கரவாத குழுக்கள் இயங்கி வரும் நிலையில், இந்த சம்பவத்துக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. இந்த சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com