ரஷியாவில் சிறுவர் பள்ளியில் துப்பாக்கி சூடு; 2 குழந்தைகள், பெண் உயிரிழப்பு

ரஷியாவில் சிறுவர் பள்ளியில் புகுந்த மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 2 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் பணியாளர் உயிரிழந்து உள்ளனர்.
ரஷியாவில் சிறுவர் பள்ளியில் துப்பாக்கி சூடு; 2 குழந்தைகள், பெண் உயிரிழப்பு
Published on

செயின்ட் பீட்டர்ஸ்பர்க்,

ரஷியாவின் மத்திய பகுதியில் வெஷ்கெய்மா நகரில் சிறுவர்களுக்கான பள்ளி கூடமொன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், பள்ளியில் திடீரென புகுந்த மர்ம நபர் அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் 2 குழந்தைகள் மற்றும் ஒரு பெண் பணியாளர் ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்றொரு பணியாளர் காயமடைந்து உள்ளார். அவர் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதன்பின்னர் துப்பாக்கியால் சுட்ட நபர் தன்னையும் சுட்டு கொண்டார். இந்த தகவலை முன்னாள் கவர்னர் செர்கெய் மோரோஜோவ் தெரிவித்து உள்ளார். இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com