

மெக்சிகோ சிட்டி,
மெக்சிகோ நாட்டின் மோரிலோஸ் மாகாணத்தில் குவர்னவாகா நகரில் புளோரஸ் மேகன் என்ற ஸ்டேடியத்தில் நேற்றிரவு கால்பந்து போட்டி ஒன்று நடந்து கொண்டிருந்தது.
இந்நிலையில், திடீரென சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பியோடி விட்டனர். இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளனர். 3 பேர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.