இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு - பராகுவேயில் பரபரப்பு சம்பவம்

பராகுவே நாட்டில் இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்க்சிசூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
இசை நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு - பராகுவேயில் பரபரப்பு சம்பவம்
Published on

ஆசுன்சியான்,

தென் அமெரிக்க நாடான பராகுவேயில் உள்ள சான் பெர்னாடினோ நகரில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் சுமார் 7 ஆயிரம் பேர் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியின் போது மர்ம நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் அங்கிருந்தவர்களை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பி ஓடியுள்ளார்.

இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டு பாய்ந்து 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தப்பியோடிய நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com