அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி

துப்பாக்கி சூட்டில் 7 பேர் படுகாயமடைந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவின் இடஹோ மாகாணம் டுவின் பால்ஸ் நகரில் துரித உணவகம் செயல்பட்டு வருகிறது.

3 பேர் பலி

இந்த உணவகத்தில் நேற்று இரவு (அந்நாட்டு நேரப்படி) வாடிக்கையாளர்கள் உணவு சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த நபர் அங்கிருந்தவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் படுகாயமடைந்தனர். தகவலறிந்து விரைந்து சென்ற போலீசார், துப்பாக்கி சூடு நடத்திய நபரை சுட்டுக்கொன்றனர். மேலும், இந்த துப்பாக்கி சூட்டிற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com