அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: தமிழக மாணவி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மாணவி சவிதா சண்முகசுந்தரம் படித்து வந்ததார்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு: தமிழக மாணவி உள்பட 4 பேர் சுட்டுக்கொலை
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் ஆஸ்டினில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் மர்மநபர் ஒருவர் துப்பாக்கி சூடு நடத்தினார். இதில் பலர் காயம் அடைந்தனர். அவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி 4 பேர் பலியானார்கள்.

இதில் தமிழகத்தை சேர்ந்த மாணவி சவீதா சண்முகசுந்தரம் என்பவரும் அடங்குவார். இவர் டெக்சாஸ் பல்கலைக்கழலகத்தில் பொருளாதாரம், நிர்வாகம், மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான இரட்டை பட்ட படிப்பு படித்து வந்தார். அவர் இன்னும் சில மாதங்களில் படிப்பை முடிக்க இருந்த நிலையில் துப்பாக்கி சூட்டில் பலியாகி உள்ளார். படிப்பை முடித்த சவீதா அடுத்த வாரம் பணியில் சேரவிருந்தார் என்ற உருக்கமான தகவலும் வெளியாகியுள்ளது.

இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அவர் செனகலை சேர்ந்த அமெரிக்க குடிமகனான நிடியாகா டியாக்னே (வயது 54) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கி சூடு பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று போலீசார் சந்தேக்கின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com