அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு; ஒருவர் பலி
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் மிட்லேண்ட் நகரில் உள்ள மருத்துவமனை அருகே நேற்று இரவு துப்பாக்கி சூடு தாக்குதல் சம்பவம் அரங்கேறியது. இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.

போலீசார் விசாரணை

இந்த துப்பாக்கி சூடு தாக்குதல் குறித்து தகவலறிந்த போலீசார் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை தீவிரமாக தேடி வந்தனர்.

ஆனால், துப்பாக்கி சூடு நடத்திய நபர் மருத்துவமனை அருகே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com