

வார்சா
போலந்து நாட்டில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில், 5 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்தனர்.
போலந்து நாட்டின் கிராகோவ் நகரில் உள்ள முக்கியத்துவம் பெற்ற மார்க்கெட் சதுக்கத்திற்கு காரில் வந்த 25 வயதுடைய வாலிபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார். இதில், 4 பெண்கள் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர். பலர் காயம் அடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலை அந்நாட்டு பிரதமர் டொனால்டு டஸ்க்கும் உறுதிப்படுத்தி உள்ளார். இதில், இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நபர் ஒருவரும் பலியாகி உள்ளார். இதுதொடர்பாக போலந்து காவல் துறையின் உயரதிகாரி மரிக் போரான் கூறும்போது, போலந்து நாட்டை சேர்ந்த 3 பேர் உள்பட 6 பேர் பலியாகி உள்ளனர்.
அவர்களில் 2 பேரை இன்னும் அடையாளம் காண முடியவில்லை. 2 காவல் அதிகாரிகள் மற்றும் 5 வெளிநாட்டினர் உள்பட 16 பேர் காயமடைந்து உள்ளனர் என கூறியுள்ளார். தொடர்ந்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் என்றார்.
வலதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு அவர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டு இருக்க கூடும் என நம்பப்படுகிறது என்று போலந்து உள்துறை மந்திரி மார்சின் கீர்வின்ஸ்கி கூறியுள்ளார்.
இதனை அடுத்து, நகரில் வருகிற 11-ந்தேதி வரை 5 நாட்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என கிராகோவ் நகர மேயர் லூகாஸ் ஜிபலா அறிவித்துள்ளார்.