

தர் எஸ் சலாம்,
தான்சானியா நாட்டின் வர்த்தக தலைநகர் தர் எஸ் சலாம் நகரில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதரகம் அருகே மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
இந்த சம்பவத்தில் தனியார் பாதுகாப்பு நிறுவனத்தின் ஊழியர் மற்றும் 3 போலீஸ் அதிகாரிகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து மர்ம நபரும் சுட்டு கொல்லப்பட்டு உள்ளார். இதனை அதிபர் ஹசன் உறுதி செய்துள்ளார்.