அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் துப்பாக்கி சூடு - 2 பேர் பலி
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அந்நாட்டின் கலிபோர்னியா மாகாணம் கிழக்கு ஹொக்லாந்து பகுதியில் இன்று காலை இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

மோதலின்போது துப்பாக்கி சூடு தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு தீவிர சிகிசை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், துப்பாக்கி சூடு நடத்திவிட்டு தப்பியோடிய நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com