அமெரிக்காவில் நடந்த மிஸ் இந்தியா அமெரிக்கா 2017 அழகி போட்டியில் ஸ்ரீ ஷைனி வெற்றி

அமெரிக்காவில் நடந்த மிஸ் இந்தியா அமெரிக்கா 2017 அழகி போட்டியில் ஸ்ரீ ஷைனி வெற்றி பெற்றுள்ளார்.
அமெரிக்காவில் நடந்த மிஸ் இந்தியா அமெரிக்கா 2017 அழகி போட்டியில் ஸ்ரீ ஷைனி வெற்றி
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் மிஸ் இந்தியா அமெரிக்கா, மிஸ் டீன் இந்தியா அமெரிக்கா, மிஸஸ் இந்தியா அமெரிக்கா என 3 பிரிவுகளில் 2017ம் ஆண்டிற்கான அழகி போட்டி நடந்தது. இதற்காக 24க்கும் கூடுதலான மாநிலங்களில் இருந்து 50 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

இதில், மிஸ் இந்தியா அமெரிக்கா அழகி போட்டியில் வாஷிங்டன் பல்கலை கழகத்தின் 21 வயது மாணவியான ஸ்ரீ சைனி வெற்றி பெற்றுள்ளார். இவரது பெற்றோர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தவர்கள் ஆவர்.

ஸ்ரீ சைனிக்கு 12 வயதில் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. இதனால் நடனமாட முடியாது என இவரிடம் கூறப்பட்டு உள்ளது. அனைவருக்கும் ஊக்கம் தரும் வகையில் செயல்படும் இவர். உயர்நிலை பள்ளியில் படிக்கும் பொழுது கொடுமைக்கு ஆளானவர்.

அழகி போட்டியில் வெற்றி பெற்ற பின்னர், மனித கடத்தலை ஒழிக்க விரும்புகிறேன் என கூறியுள்ளார்.

இந்த போட்டியில் 22 வயது நிறைந்த மருத்துவ மாணவியான கனெக்டிகட்டை சேர்ந்த பிராச்சி சிங் 2வது இடமும், வடகரோலினாவை சேர்ந்த பரீனா 3வது இடமும் பெற்றனர்.

இதேபோன்று மிஸஸ் இந்தியா அமெரிக்கா 2017 போட்டியில் புளோரிடாவை சேர்ந்த புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணரான கவிதா மல்ஹோத்ரா பட்டானி வெற்றி பெற்றுள்ளார். 2வது இடத்தினை பிரேர்ணா மற்றும் 3வது இடத்தினை ஐஸ்வர்யா பெற்றுள்ளனர்.

டீன் ஏஜ் வயதினருக்கான மிஸ் டீன் இந்தியா அமெரிக்கா 2017 அழகி போட்டியில் நியூ ஜெர்சியை சேர்ந்த சுவப்னா மன்னம் (வயது 17) வெற்றி பெற்றார். சிம்ரன் 2வது இடமும், கிரித்திகா 3வது இடமும் பெற்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com