

ஜெருசலேம்,
இஸ்ரேல் மற்றும் பூட்டான் ஆகிய இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இருநாட்டு தூதுவர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தின் மூலம் நீர் மேலாண்மை, வேளாண் திட்டம், சுகாதாரம் மற்றும் பிற திட்டங்களில் இரு நாடுகளும் கூட்டாக பணியாற்ற ஒப்புக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இஸ்ரேலின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறுகையில், பூடான் உடனான இந்த ஒப்பந்தம் ஆசிய நாடுகளுக்கு இடையிலான இஸ்ரேலின் உறவுகளை மேம்படுத்துவதில் மற்றொரு மைல்கல்லாக அமையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.