சிங்கப்பூர்: உணவு பிரியர்களை கவர மெனு பட்டியலில் 16 வகை புழு, பூச்சிகள்

சிங்கப்பூரில் உள்ள உணவு விடுதிகளில் சில 30 பூச்சிகள் அடங்கிய டிஷ்களை தங்களுடைய உணவு பட்டியலில் சுட்டி காட்டியுள்ளது.
சிங்கப்பூர்: உணவு பிரியர்களை கவர மெனு பட்டியலில் 16 வகை புழு, பூச்சிகள்
Published on

சிங்கப்பூர்,

சிங்கப்பூரில் மக்கள் சாப்பிடுவதற்கான உணவு பொருட்களில் புழுக்கள் மற்றும் பூச்சிகள் ஆகியவற்றை சேர்த்து கொள்ள அனுமதிக்கப்பட்டு உள்ளது. இதன்படி, வெட்டுக்கிளிகள், பட்டுப்புழுக்கள் உள்ளிட்ட 16 பூச்சியினங்களை மனிதர்கள் உட்கொள்வதற்கு சிங்கப்பூரில் உள்ள உணவு கழகம் (எஸ்.எப்.ஏ.) ஒப்புதல் அளித்துள்ளது.

பூச்சிகள் மற்றும் அவை சார்ந்த பொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கும் அனுமதி அளிக்கப்படும். இவை, மனிதர்கள் உணவாக உட்கொள்ளவோ அல்லது உணவை உற்பத்தி செய்யும் விலங்குகளுக்கு தீவனம் அளிப்பற்காகவோ பயன்படுத்தப்படும்.

இதனை தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள விநியோகஸ்தர்கள் மற்றும் உற்பத்தியாளர்கள், சீனா, தாய்லாந்து மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் உள்ள பண்ணைகளில் இருந்து பூச்சிகளை பெறுவதற்கான பணிகளை தொடங்கியுள்ளனர்.

எனினும், இவ்வகை பூச்சிகள், உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டு விதிகளுக்கு கட்டாயம் உட்பட்டு இருக்க வேண்டும். உணவு பாதுகாப்பு விதிகளுக்கு உட்படாத பூச்சிகள், அவற்றின் பொருட்கள் அடங்கிய பேக்குகள் விற்பனைக்கு அனுமதிக்கப்படாது.

இந்த சூழலில், விற்பனையை அதிகரிக்க மற்றும் வாடிக்கையாளர்களை கவர இந்த பூச்சிகள் அடங்கிய புதிய மெனுக்கள் உதவும் என உணவு விடுதிகள் மற்றும் கபேக்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றன. ஒரு சில உணவு விடுதிகள் 30 பூச்சிகள் அடங்கிய டிஷ்களையும் மெனுவில் சுட்டி காட்டியுள்ளது.

அவற்றை சமைத்து, கடல்உணவுகளுடன் சேர்த்து புதிய டிஷ்ஷாகவும் விற்பனைக்கு கொண்டு செல்லப்படும். இந்த சூழலில், உணவு விடுதிகளிடம் தினமும் 5 முதல் 6 முறை தொலைபேசி வழியே வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்கின்றனர்.

அவர்கள், பூச்சிகளின் டிஷ்கள் பற்றியும், எப்போது அவற்றை ஆர்டர் செய்யலாம் என்பன போன்ற விசயங்களை கேட்க தொடங்கி விட்டனர் என கடல்உணவுக்கான விடுதியின் தலைமை செயல் அதிகாரியான பிரான்சிஸ் கூறுகிறார்.

அவர்களில் 30 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களே அதிக தைரியத்துடனும், ஆர்வத்துடனும் முன்வந்திருக்கின்றனர். அவர்கள், தங்களுடைய ஒரே டிஷ்ஷில் எல்லா பூச்சிகளும் இருக்க வேண்டுமென விரும்புகிறார்கள் என்றும் பிரான்சிஸ் கூறுகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com