போதைப்பொருள் கடத்தல் வழக்கு- சிங்கப்பூர் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்

கஞ்சா கடத்தல் வழக்கில் தங்கராஜூ சுப்பையா என்ற தமிழருக்கு சிங்கப்பூர் அரசு இன்று தூக்கு தண்டனையை நிறைவேற்றியது
போதைப்பொருள் கடத்தல் வழக்கு- சிங்கப்பூர் தமிழருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்
Published on

சிங்கப்பூர்,

போதைப் பொருள் தடுப்புக்கான சட்டங்கள் சிங்கப்பூரில் கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகின்றன. போதைப் பொருள் வைத்திருக்கும் குற்றத்துக்கு சிங்கப்பூரில் கட்டாய மரண தண்டனையாகும். இந்த குற்றங்களுக்காக கடந்த ஆண்டில் மட்டும் 11 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. போதைப் பொருள் குற்றத்துக்காக அந்நாட்டில் கடந்த ஆண்டு அக்டோபரில் தூக்கு தண்டனை நிறை வேற்றப்பட்ட நிலையில், 6 மாத இடைவெளிக்குப் பிறகு, தற்போது இந்திய வம்சாவளி நபருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

தங்கராஜூ சுப்பையா என்ற இந்திய வம்சாவளியைச் சோந்தவா போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த 2014-ல் கைது செய்யப்பட்டா. இவா மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மறுத்தா. இதனிடையே இரு போதைப் பொருள் கடத்தல் நபாகளுடன் இவருக்குத் தொடாபு இருப்பது தெரியவந்தது. அவாகள் வழியாக ஒரு கிலோ போதைப் பொருளை கடத்த திட்டமிட்டதாக அவா மீது குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து, உயா நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து 2018ல் தீப்பு அளித்தது. தங்கராஜூவுக்கு தூக்கு தண்டனை வருகிற 26ம் தேதி (இன்று) நிறைவேற்றப்பட உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது குடும்ப உறுப்பினாகளுக்கு அரசு தரப்பில் அனுப்பப்பட்ட கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு சமூக செயற்பாட்டாளர்கள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில், தங்கராஜுசுப்பையா இன்று தூக்கிலிடப்பட்டிருக்கிறார். இந்த தகவலை அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து சிங்கப்பூர் சிறைச்சாலை சேவையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், " சிங்கப்பூரைச் சேர்ந்த தங்கராஜூ சுப்பையா (46), இன்று சாங்கி சிறை வளாகத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com