சிங்கப்பூரில் ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டம் ரத்தாகிறது

ஆசியாவில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது.
சிங்கப்பூரில் ஓரின சேர்க்கைக்கு எதிரான சட்டம் ரத்தாகிறது
Published on

சிங்கப்பூர்:

உலகின் பெரும்பாலான நாடுகளில் ஓரின சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டம் இன்னும் அமலில் உள்ளன. ஆனால் சமீபத்திய ஆண்டுகளில் ஓரினச் சேர்க்கை பற்றிய புரிந்துணர்வு அறிவியல் ரீதியாகவும், மருத்துவ ரீதியாகவும் வளர்ந்து வருவதன் காரணமாக பல நாடுகள் ஓரின சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கி வருகின்றன. ஆசியாவில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் ஓரின சேர்க்கைக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் உள்ளது.

இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூரில் ஓரின சேர்க்கையை குற்றமாக கருதும் 337ஏ சட்டப்பிரிவை ரத்து செய்ய உள்ளதாக அந்த நாட்டின் பிரதமர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படும் என அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com