உருமாற்றம் அடைந்த கொரோனா குழந்தைகளை பாதிப்பதால் பள்ளிகளை மூட சிங்கப்பூர் உத்தரவு

சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக 38 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது.
உருமாற்றம் அடைந்த கொரோனா குழந்தைகளை பாதிப்பதால் பள்ளிகளை மூட சிங்கப்பூர் உத்தரவு
Published on

சிங்கப்பூர்,

இந்தியாவில் கண்டறியப்பட்டது போன்ற புதிய வகை கொரோனா வைரஸ் திரிபு சிங்கப்பூரிலும் கண்டறியப்பட்டுள்ளது. சிறுவர்கள் மத்தியில் அதிகம் பரவும் தன்மை கொண்ட வைரஸ் தொற்று என்பதால் சிங்கப்பூரில் பள்ளிகள் வரும் புதன்கிழமை முதல் மூடப்பட உள்ளன.

ஆரம்ப நிலை முதல் ஜூனியர் கல்லூரிகள் வரையிலான வகுப்புகள் வீட்டில் இருந்தபடியே கற்றுக்கொள்ளும் ஆன்லைன் முறையிலேயே நடைபெறும் என்று சிங்கப்பூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சிங்கப்பூரில் கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவாக 38 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. இதில் டியூஷன் கிளஸ்டர்கள் மூலமாக ஏற்பட்ட பாதிப்பில் சில சிறுவர்களும் அடங்குவர்.

இதுகுறித்து கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறும்போது, சிலவகை உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் ஆபத்தானதாக உள்ளன. இவை குழந்தைகளை அதிகம் பாதிக்கின்றன. இதில் நமக்கு கவனம் தேவை என்று தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com