சிங்கப்பூர்: இந்திய வம்சாவளி மனித உரிமைகள் வழக்கறிஞர் ரவி காலமானார்


சிங்கப்பூர்: இந்திய வம்சாவளி மனித உரிமைகள் வழக்கறிஞர் ரவி காலமானார்
x

உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரவி மாடசாமி இன்று காலமானார்

சிங்கப்பூர்,

சிங்கப்பூரை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் ரவி மாடசாமி (வயது 56). இவர் சர்வதேச அளவில் மனித உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். மேலும், மரண தண்டனைக்கு எதிராகவும், தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாகவும் சிங்கப்பூரில் பல்வேறு வழக்குகளுக்கு இவர் வாதாடியுள்ளார்.

மேலும், ரவி மாடசாமியின் மனித உரிமைகள் தொடர்பான செயல்பாடுகளை பாராட்டி சர்வதேச வழக்கறிஞர்கள் சங்கம் அவருக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. 1969ம் ஆண்டு பிறந்த ரவி மாடசாமி இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ரவி மாடசாமி இன்று காலமானார். 25 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றிய ரவி மாடசாமி மறைவிற்கு சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

1 More update

Next Story