மெக்சிகோவில் பஸ் மீது லாரி மோதி 6 பேர் சாவு

மெக்சிகோவில் பஸ் மீது லாரி மோதி 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர்.
மெக்சிகோவில் பஸ் மீது லாரி மோதி 6 பேர் சாவு
Published on

மெக்சிகோவின் மைக்கோவாகன் மாகாணத்தில் உள்ள லா பீடாட்- விஸ்டா ஹெர்மோசா நெடுஞ்சாலையில் மளிகை பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றது. யுரேகுவாரோ நகர் அருகே சென்றபோது இந்த லாரி திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் நிலைதடுமாறி எதிரில் வந்த பஸ் மீது வேகமாக மோதியது. இதில் பஸ்சும், லாரியும் தீப்பிடித்து எரிந்தன.

இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்கிடையே பஸ்சில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்றது. எனினும் இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியாகினர். மேலும் காயம் அடைந்த 53 பேருக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com