இங்கிலாந்தில் பிளைமவுத் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி

தென்மேற்கு இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டனர்
இங்கிலாந்தில் பிளைமவுத் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் பலி
Published on

லண்டன்,

தென்மேற்கு இங்கிலாந்தின் பிளைமவுத் நகரில் நேற்று மாலை நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலர் பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் மிகவும் அதிர்ச்சி அளிப்பதாக உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் வரை கொல்லப்பட்டதாக டைம்ஸ் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தி டெய்லி டெலிகிராப் கூறியது. அவர் தற்கொலை செய்தாரா அல்லது போலீசாரால் சுடப்பட்டாரா என்பது குறித்த உறுதியான தகவல் வெளியாகவில்லை.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கையை போலீசார் இதுவரை உறுதிப்படுத்தவில்லை, ஆனால் நிலைமை கட்டுக்குள் இருப்பதாக நம்பப்படுகிறது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com