நைஜீரியாவில் சர்ச் மீது துப்பாக்கி சூடு; 16 பேர் பலி

நைஜீரியாவில் சர்ச் மீது நடந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் 16 பேர் பலியாகி உள்ளனர்.
நைஜீரியாவில் சர்ச் மீது துப்பாக்கி சூடு; 16 பேர் பலி
Published on

லாகோஸ்,

நைஜீரியாவில் முகமது புகாரி அதிபராக இருந்து வருகிறார். இந்த நிலையில், அங்குள்ள பழங்குடியின முஸ்லிம் மக்களுக்கும், கிறிஸ்தவ மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

அந்நாட்டில் புலானி பழங்குடியின பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். கிறிஸ்தவர்கள் விவசாயம் செய்யும் பிரிவினராக உள்ளனர். நிலங்களில் ஆடுகளை மேய விடுவது பற்றிய விவகாரத்தில் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் நடந்து வருகிறது.

இந்நிலையில், குவெர் கிழக்கு நகரில் ஆயர் எம்பலம் பகுதியில் அமைந்த சர்ச் ஒன்றின் மீது துப்பாக்கிகளுடன் சென்ற இடையர் பிரிவினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இந்த சம்பவத்தில் 16 பேர் பலியாகி உள்ளனர் என உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர்களில் 2 பேர் கிறிஸ்தவ மத போதகர்கள் ஆவர்.

இந்த வருட தொடக்கத்தில் மகுர்டி பகுதியில் நடந்த மோதலில் 73 பேர் கொல்லப்பட்டனர். புலானி பிரிவை சேர்ந்தவரான அதிபர் புகாரி, இடையர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை தடுக்க எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டி விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் இதற்கு அதிபர் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com