சீனாவில் பரபரப்பு: 109 மாடி கட்டிடம் மீது மோதிய சிறிய ரக விமானம்

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விமான விபத்து
Published on

பீஜிங்,

சீனாவின் தலைநகர் பீஜிங்கில் உள்ள மத்திய தொழில் மாவட்டத்தில் 109 மாடி கொண்ட வணிக கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் என பல செயல்பட்டு வருகின்றன. பீஜிங்கில் உள்ள மிகவும் உயரமான கட்டிடம் இதுவாகும்.

விமான விபத்து

இந்நிலையில், இந்த அடுக்குமாடி கட்டிடம் மீது நேற்று சிறிய ரக விமானம் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்த கட்டிடத்தின் கண்ணாடிகள் உடைந்தன. மேலும், சிறிய ரக விமானம் அடுக்குமாடி கட்டிடத்திற்குள் புகுந்தவாறு நின்றது. இந்த சம்பவம் குறித்து விரைந்து சென்ற போலீசார், விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com