

மணிலா,
பிலிப்பைன்சின் வடக்கே விமான நிலையம் ஒன்றில் இருந்து இரட்டை என்ஜின் பொருத்தப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று இன்று புறப்பட்டு சென்றது. அது வடமேற்கே லூஜான் நகரில் உள்ள லாவோக் பகுதிக்கு சென்று சேரவேண்டியது.
விமானத்தில் 2 விமானிகள் உள்பட 6 பேர் பயணம் செய்தனர். இந்த நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் வீடு ஒன்றின் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் விமானத்தில் இருந்த 6 பேர் உள்பட 7 பேர் பலியாகினர்.
எனினும் பிலிப்பைன்ஸ் சிவில் விமான போக்குவரத்து அமைப்பு மற்றும் போலீசார் விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய தகவலை வெளியிடவில்லை.