அமெரிக்காவில் பனிப்புயல்: 13 ஆயிரம் விமானங்கள் ரத்து

பனிப்புயல் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாஷிங்டன்,
அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. மேலும், சில மாகாணங்களில் பனிப்புயலும் வீசி வருகிறது. இந்த வார இறுதியில் பனிப்புயல் தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர். பனிப்புயல் மேலும் தீவிரமடையும் என்பதால் விமான சேவை பெரும் பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story






