செல்பி புகழ் கொரில்லா பாதுகாவலரின் மடியில் உயிர்விட்டது

14 வயதாகும் நடாகாஷி என்ற பெயருடைய அந்த பெண் கொரில்லா உடல்நலக் குறைவால் இறந்ததாக விருங்கா தேசிய பூங்கா தெரிவித்துள்ளது.
செல்பி புகழ் கொரில்லா பாதுகாவலரின் மடியில் உயிர்விட்டது
Published on

காங்கோ

2019-ஆம் ஆண்டில் காங்கோவில் வன பாதுகாவலர் மேத்யூ ஷவாமுடன் செல்பி போஸ் கொடுத்து பிரபலமடைந்த நடாகாஷி மற்றும் மடாபிஷி என்கிற 2 கொரில்லா குரங்குகளில் ஒன்று நடாகாஷி அதன் பாராமரிப்பாளரின் மடியிலேயே உயிரை விட்டது.

14 வயதாகும் நடாகாஷி என்ற பெயருடைய அந்த பெண் கொரில்லா உடல்நலக் குறைவால் இறந்ததாக விருங்கா தேசிய பூங்கா தெரிவித்துள்ளது. 2019-ல் அதனுடன் செல்பி எடுத்து வெளியிட்ட வன பாதுகாவலரும் பராமரிப்பாளருமான மேத்யூ ஷவாமு வின் மடியிலேயே நடாகாஷி இறுதி மூச்சை விட்டது.

செல்பிக்கு அடிமையான கொரில்லாக்கள்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com