கனடா பிரதமர் 4 நாட்களுக்குள் பதவி விலக எம்.பி.க்கள் கெடு

கனடா பிரதமர் 4 நாட்களுக்குள் பதவி விலக வேண்டுமென எம்.பி.க்கள் கெடு விதித்துள்ளனர்.
கனடா பிரதமர் 4 நாட்களுக்குள் பதவி விலக எம்.பி.க்கள் கெடு
Published on

ஒட்டாவா,

கனடாவில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியின் செல்வாக்கு மக்களிடையே சரிந்து வருகிறது. இது கடந்த ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் எதிரொலித்தது. இடைத்தேர்தல் நடந்த 2 முக்கிய தொகுதிகளிலும் லிபரல் கட்சி தோல்வியை சந்தித்தது.

இந்த தோல்விக்கு பிரதமர் ட்ரூடோ தான் காரணம் என குற்றம் சாட்டிய லிபரல் கட்சி எம்.பி.க்கள் சிலர் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர்.

இந்நிலையில் லிபரல் கட்சி எம்.பி.க்கள் நேற்று முன் தினம் ரகசிய கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலக வேண்டுமென அதிருப்தி எம்.பி.க்கள் வலியுறுத்தினர்.

4 நாட்களுக்குள் (அக்.28) ட்ரூடோ பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டுமென எம்.பி.க்கள் கையெழுத்திட்ட கடிதத்தை அவரிடமே கொடுத்துள்ளனர். ட்ரூடோ மீண்டும் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று எம்.பி.க்கள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கனடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஆண்டு மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றஞ்சாட்டி வருகிறார். இதனால் இந்தியா - கனடா உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com