7வது நாள்: உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா மிகப் பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல்

உக்ரைனின் கார்கிவில் போலீஸ் தலைமையகத்தில் ரஷிய ராணுவம் பயங்கர தாக்குதலை நிகழ்த்தியுள்ளது.
7வது நாள்: உக்ரைன் கார்கிவ் நகரில் ரஷியா மிகப் பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல்
Published on

கிவ்,

உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.

அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

நேற்று ரஷ்யா உக்ரைனிலுள்ள உலகின் மிகப்பெரிய கோபுரங்களில் இரண்டாவது இடத்திலுள்ள கீவ் டிவி கோபுரத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் உக்ரைன் மக்கள் சிலர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த நிலையில் தற்போது ரஷியாவின் வான்வழிப் படைகள் உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் பகுதிக்குள் நுழைந்துள்ளது. கார்கிவ் பகுதிக்குள் நுழைந்த ரஷிய படைகள் அங்குள்ள ஒரு மருத்துவமனையை தாக்கியதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது.

தற்போது ரஷிய படைகள் கார்கிவ் பகுதியில் உள்ள போலீஸ் தலைமையகத்தை ரஷியா ராக்கெட்டின் மூலம் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியுள்ளது.

அந்த கட்டிடம் ஏறக்குறைய அழிந்துவிட்ட நிலையில், தற்போது தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உக்ரைன் ராணுவ நிர்வாகம், மக்கள் பாதுகாப்பான இடத்தை விட்டு வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com