தென்ஆப்பிரிக்கா: ரெயில்கள் மோதல் - 4 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

தென்ஆப்பிரிக்காயில் இரண்டு ரெயில்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலியானதுடன், 300க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
தென்ஆப்பிரிக்கா: ரெயில்கள் மோதல் - 4 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்
Published on

ஜோகனஸ்பெர்க்,

தென் ஆப்பிரிக்காவில் ஒரே தண்டவாளத்தில் சென்ற இரண்டு ரெயில்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பிரிடோரியா மற்றும் மபோபேன் பகுதிகளை இணைக்கும் வழித்தடத்தில் இரண்டு ரெயில்கள் ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தன. அதில் நூற்றுக்கணக்கான பயணிகள் பயணம் செய்தனர்.

அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த ரெயில் மீது பின்னால் வேகமாக வந்த ரெயில் வேகமாக மோதியது. இந்த விபத்தில் ரெயிலில் பயணம் செய்த 4 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 300க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டனர். பின்னர் அவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் படுகாயமடைந்த 82 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com