'கால்களை மூடுங்கள், புத்தகத்தை விரியுங்கள்' மாணவிகளிடையே தென் ஆப்பிரிக்க மந்திரி சர்ச்சை பேச்சு

'கால்களை மூடுங்கள், புத்தகத்தை விரியுங்கள்' மாணவிகளிடையே தென் ஆப்பிரிக்க பெண் மந்திரி சர்ச்சை பேச்சு
'கால்களை மூடுங்கள், புத்தகத்தை விரியுங்கள்' மாணவிகளிடையே தென் ஆப்பிரிக்க மந்திரி சர்ச்சை பேச்சு
Published on

கேப்டவுன்

தென் ஆப்பிரிக்காவின் லிம்போபோ மாகாணத்தின் பெண் சுகாதார மந்திரி போபி ரமதுபா பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

பெண் குழந்தைகளுக்கு நான் சொல்வது இது தான்: உங்கள் புத்தகத்தை விரியுங்கள், உங்கள் கால்களை மூடுங்கள். உங்கள் கால்களை விரிக்காதீர்கள், புத்தகத்தை விரியுங்கள்.

பெண்கள் வயதான ஆண்களால் விலை உயர்ந்த விக்குகள், ஸ்மார்ட்போன்கள் போன்ற பொருட்களால் ஆசைகாட்டி கவரப்படுகிறார்கள் என கூறினார்.

இவரது பேச்சு குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது இதை தொடர்ந்து அவருக்கு பலர் கண்டனம் தெரிவித்தனர்

போபி ரமதுபாவின் கருத்து பிரச்சினைக்குரியது என எதிர்கட்சியைச் சேர்ந்த சிவிவே குவாருபே கூறினார்.

"பள்ளி மானவர்களிடம் பாலுறவுக்கு முன் அனுமதி பெறுவது குறித்து அர்த்தமுள்ள ஒரு விவாதத்தை மேற்கொண்டிருக்கலாம்... அதற்கு பதிலாக நீங்கள் பாதிக்கப்பட்டவர்களையே குறை கூறுகிறீர்கள். பெண்கள் மீது தேவையற்ற அழுத்தத்தைக் கொடுக்கிறீர்கள்." என டுவிட்டர் சமூக தளத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

தன்னுடைய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும், தான் ஆண்களையும் குறிப்பிட்டுத் தான் அக்கருத்தைக் கூறியதாகவும் போபி ரமதுபா தற்போது விளக்கம் அளித்து உள்ளார்.

"பெண்களோடு பாலுறவு கொள்ள வேண்டாம், கல்வியில் கவனம் செலுத்துங்கள் என ஆண்களுக்கும்தான் கூறினேன்" என்றார் ரமதுபா. மேலும் தன் தொகுதியான லிம்போபோவின் வாக்காளர்கள் இக்கருத்தை பாராட்டியதாகவும் கூறினார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் கிட்டத்தட்ட 33,400 பெண்கள் 17 வயதுக்குள் குழந்தையைப் பெற்றெடுத்ததாக அரசு புள்ளிவிவரம் கூறுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com