தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா காலமானார்

தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா இன்று காலமானார். #WinnieMandela
தென்னாப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலாவின் மனைவி வின்னி மண்டேலா காலமானார்
Published on

ஜோகன்னெஸ்பர்க்,

தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடி சிறை சென்றவர் நெல்சன் மண்டேலா. இவரது மனைவி வின்னி மண்டேலா (வயது 81). நெல்சன் மண்டேலாவின் இனவெறிக்கு எதிரான போராட்டங்களில் அவருடன் இணைந்து செயல்பட்டவர். அதன்பின்னர் கடந்த 1996ம் ஆண்டில் நெல்சன் மண்டேலா வின்னியிடம் இருந்து விவாகரத்து பெற்றார்.

கடந்த பல வருடங்களாக அறுவை சிகிச்சையினால் வின்னிக்கு உடல்நலம் மோசமடைந்து வந்தது. இந்த நிலையில், கடந்த வாரம் வெள்ளி கிழமை வின்னிக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதற்காக ஜோகன்னெஸ்பர்க் நகரில் உள்ள மில்பார்க் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் வின்னி மண்டேலா இன்று காலமானார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com